பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18. துளசி இலைச் சாறு சுரப்பிணி, அளவுநோய் இனமெலாம் நீக்கும். 19. பசும்பிடி இலைச் சாற்றால் தலைப்பேன் போகும்; முகப்பரு வேர் அறும்; தோற் புண் ஆறும். 20. ஆலம் அனைத்துறுப்புகளும் மேகம், உள் கடுப்பு நீரிழிவு ஆகியவற்றை நீக்கும். 21. எருக்கம் பால் மருந்துக்காகும். வெள்ளெருக்கின் நாரை எடுத்துக் குழந்தைகட்குக் கடிப்படையாகக் கட்டும் வழக்கம் உண்டு. 22. ஊமத்தையின் வித்து வெறியேற்றும் குணம் கொண்டது. 23. முருங்கைக் கீரையுணவால் வயிற்றுக் குற்றம் வராது. இது மேக நோய் நீக்கும் மருந்தாகவும் இருக்கிறது. முருக்கம் பூவால் கண் குளிர்ச்சி ஏற்படும்; பித்தம் குறையும்; நாச்சுவையின்மை நீங்கும். இதனை ஆவின் பாலில் அவித்து உண்டு வர ஆண் வீரியம் கெட்டிப்படும். 24 மயிலை மலர் குருதிப் பித்தத்தைப் போக்கும், 25. குசும்பைப் பூவிலிருந்து ஆடைக்கேற்றும் காவி நிறச்சாறு எடுக்கப்படுகிறது. எல்லாப் பூவும் இதன்பாலுள; இதன்பால் இல்லாத எப்பூவும் இல்லை; இவ்வாறாகத் தமிழ் நிலத்திலுள்ள பூக்களைப் பற்றிய முழு விவரங்களையும் ஒரே நூலில் அறிய வேண்டுமானால் இதற்கு இது தவிர வேறு நூல் இல்லையென்று துணிந்து கூறலாம். பூக்களின் அமைப்பை ஆசிரியர் தெளிவாக விளக்குவது கொண்டு அவர் ஒவ்வொரு பூவையும் தேடி, நாடி, அறிந்து இந்நூலை ஆக்கியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. ஆசிரியரின் அரிய உழைப்பு தெளிந்த அறிவு, நிறைந்த பட்டறிவு ஆகியவற்றின் இணைப்பாக இந்நூல் விளங்குகிறது. . இப்பூக்காட்டில் நுழையும் தும்பியாக நாம் விளங்கு வோமாக! அன்பன், சு செல்லப்பன்