பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இலக்கியம் ஒரு பூக்காடு

1.பூவுலகில் பூரிக்கும் பூக்கள்



பூ-உலகம்


பூவே, நீ வாழ்க! எனது உள்ளம் கவர்ந்தவள் மிக மென்மையானவள். அவளது உள்ளமும் மென்மை; உடலும் மென்மை. அம்மென்மைக்கு உவமை தேடி அலைந்தேன். ஒரு பொருளும் ஒப்பாகக் கிடைக்க வில்லை. பூவே ! உன்னிலும் அவள் மென்மையானவள் தான். ஆனாலும், உனது இயல்பால் அவளுக்கு உவமையாக நீதான் அணுகி வருகின்ருய். அதனால்,


"நன்னீரை: வாழி அனிச்சமே"1

இது ஒரு காதற் குமரனது உணர்ச்சி உரையாடல் திருவள்ளுவ்ப் பெருந்தகை இயக்கிய நாடக மேடையில் இவ்வாறு அவனைப் பேசவிட்டார். அவனது உரையாடல் மூலம் பூவின் மென்மைச் சிறப்பை வழங்கும் வாழ்த்து மலர் இது: தமிழ் மென்மை.


1 திருக்குறள் : 1111