பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



18

கொடுமையின் மேல் மட்டச் சின்னம். 'உரோம நகரம் பற்றி எரியும்போது அரண்மனை நிலாமுற்றத்தில் வீணை மீட்டிக் கொண்டிருந்தவன்' என உலகில் அறிமுகமாகியுள்ள நீரோ மன்னன்தான் அவன். இந்நிகழ்ச்சி ஒன்றே அன்பும் அருளும் இல்லாத அவனது தீக்குணத்தை அறிவிக்கின்றது.

  வீணை மீட்டிய அவனது வாழ்வு கொலை உள்ளத்தின் வார்ப்பு எனலாம். அவன், கணவனுக்கு நஞ்சு ஊட்டிக் கொன்ற தாயின் மகன். தனது அரச பதவி கருதித் தனது ஒன்றுவிட்ட உடன் பிறந்தானைக் கொன்றவன். காதலிக்காக ஈன்ற அன்னையைக் கொன்றவன். அடுத்த காதலிக்காக மனைவியைக் கொன்றான். கருவுற்றிருந்த காதலியைக் காலால் உதைத்தே கொன்று குழந்தையையும் கொன்றவனானான். இறுதியில் தன்னைத்தானே கொன்றுதொண்டு கொலைமுடி சூடியவன்.
  இத்தகைய கொலைக்கறை படிந்த உள்ளம் பூக்கலையில் தோய்ந்தமை பூவின் பெருமைக்கு மாலை சூட்டுகின்றது.
  அவன் செயல்களை எல்லா வகையாலும் வெறுத்த மக்கள் இந்த ஆணையை மட்டும் ஆர்வத்துடன் ஏற்றனர். கவனங் காட்டிக் கடைப்பிடித்தனர். இல்லங்களை மலர்க்கோலமாக்கினர்.
  மேலை நாடுகளில் இவ்வாறான இல்ல ஒப்பனை ஒருபெருங் கலையாக வளர்ந்தது. இதற்கு ஆய்வுக் கழகங்கள், பயிற்சி வகுப்புகள் நிகழ்ந்தன. 1907 இல் கெர்டிரியூடி செக்கிள் என்னும். ஓவிய அறிஞன் 'இல்லத்தில் மலர் ஒப்பனை' என்றொரு நூலை எழுதினான். இக்கலை மற்றைய நாடுகளைக் காட்டிலும் சப்பானில் மிகப்பெருங் கலையாகத் தலையெடுத்துத் தழைத்தது.
  சப்பானியர் மலர்க் காதலர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு பூவை அடையாளச் சின்னமாகக் கொள்வர். அப்பூவை உடை, அணிகலன், பாண்டம் முதலியவற்றில் பொறித்துக் கொள்வர்.
  இதுபோன்றே இல்லங்களை மலர் ஒப்பனையால் எழில் ஊட்டும் பழக்கம் அவர்கட்கு அன்றாடக்கடமையாயிற்று. ஒப்பனையாகப் பூக்களை அடுக்கும் பாங்கு ஒரு கலை. அக்கலை அங்கு ஒரு கல்வியாகவே மலர்ந்தது, கி. பி. ஏழாம் நூற்றாண்டளவில் மலர் ஒப்பனைக்கென்று ஒரு பள்ளி தோன்றியது. அப்பள்ளிக்கு