பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



22

இறைவனை நோக்கமாகக் கொண்டது; உயிர்,இறைவன் தொடர்பைக் காட்டுவது. இத்தொடர்பிலும் மலர்த் தொடர்பு இணைந்து நிற்கின்றது.

கடவுளரையே பூப்பெயரிட்டுப் போற்றினர்.கொன்றையாண்டி, தாமரைக்கண்ணன்,மலரவன், பூவன், கடம்பன் என. அவ்வக் கடவுளர்க்கென ஒவ்வொரு பூவை உரிமைப்படுத்தி அவ்வப் பெயரால் வழங்கினர்.

"மலர்மிசை ஏகினான்" என்று திருவள்ளுவர் ஆண்ட தொடரில் தத்தம் கடவுளரைப் பொருத்தி நிலைநாட்டுவதில் போட்டி போட்டனர். மலரின்மேல் தத்தம் கடவுளரை நடக்க வைத்துப் பார்ப்பதில் பேரவாக் கொண்டனர்.

மேலைநாட்டிலும் பூவால் பெயரிடப்பட்ட கடவுளர் உளர் உரோமானியத் தொன்மைக் கடவுள் சாயி' OYE என்னும் மலரால் பெயர் அமைந்த "சாயி சூப்பிட்டர் - JOYE JUPITOR" என்பது, அங்குப் போற்றப்படும் 'ஃபுளோரா' என்னும் தெய்வம் "மலர்த் தெய்வம்’ எனப்படும்.

ஆன்மவியலின் இயக்கமே மதமென வழங்கப்படுவது. மதம் என்றால் கொள்கை-கோட்பாடு. இறைவனை அறியும் வழியைக் காட்டுவதே இக்கோட்பாடு. வழியில் படுவதாலும், வழியில் படுத்துவதாலும் இதற்கு வழிபாடு என்னும் சொல் அமைந்தது. இவ்வழி பாட்டு முறையில் கீழைநாட்டு மதங்கள் விரிவும் நெறியும் சற்று ஆரவாரமும் கொண்டவை. மேலைநாட்டு மதங்கள் நெறிகளைக் கொண்டிருப்பினும் அவை சுருக்கமானவை.

கூடித்தொழுதல் ஒன்றே நடைமுறை. இவை கொண்டு கீழைநாட்டு முறையை 'வழிபாடு' - 'பூசை' (பூ செய்)-என்றும், மேலைநாட்டு முறையைத் 'தொழுகை’ என்றும் குறிக்கலாம்.

கீழைநாட்டு வழிபாட்டில் பூ முதன்மைப்பொருள். இன்னும் சொன்னால் பூதான் வழிபாட்டின் முழுமைப் பொருள். மேலும் குறித்தால் 'மலரேகடவுள்' என்னும் அளவில் பூ இடம்பெற்றுள்ளது.

மேலைநாட்டுத் தொழுகையில் மலர், சார்த்தும் பொருளும் அன்று. காலப்போக்கில் நம் நாட்டு முறையைக் கொண்டு ஒப்பனைப் பொருளாகச் சிலரால் கொள்ளப்பட்டது.

உலகத்து மதங்கள் பலவற்றுள்ளும் பூவிற்கு நிறைவான இடத்தை, அதனிலும் அங்கிங்கெனாதபடி எங்கும் பேரொளியான இடத்தைத் தந்துள்ளது சைவ மதம் வழிபாட்டில் மட்டுமன்று