பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


31

    காதலால் கூடிக் குலாவும் புணர்ச்சி ஒழுக்கம் - குறிஞ்சித் திணை: 
    காதலன் பிரியக் காத்திருக்கும் ஒழுக்கம் - முல்லைத் திணை: 
    காதலனோடு ஊடும் ஒழுக்கம் - மருதத் திணை;
    காதலன் பிரிவிற்கு இரங்கும் ஒழுக்கம் - நெய்தல் திணை. 
    காதலனோடு உடன்போகும் ஒழுக்கம் - பாலைத்திணை
 -எனக்காதல் ஒழுக்கங்களும் மலர்களாலேயே குறியீடுகளைப் பெற்றன.

இவ்வாறு மன உணர்விற்குப் பெயர் குறிக்கும் போது மன உணர்வு நின்றதைக் காண்கின்றோம்.

வீரப் பூ

 வாழ்வின் அகங்கை போன்றது அகத்திணை. புறங்கை போன்ற புறத்திணையிலும் மலர் பெற்ற சிறப்பினை நினைந்தால் உள்ளத்தில் ஒரு புதுமணம் புலப்படுகின்றது.
  கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன புற வாழ்வு. ஆயினும் போர் வீரமே பெரும் பகுதியாகப் புறத்திணையில் ஆட்சி செலுத்துகின்றது. புறம் என்றாலே போர் என்றே கொள்ளப்பட்டது.

“புறத்திணைச் சீரது போரே என்ப" -எனக் கூத்த வரி நூல் (44) என்னும் கூத்துத் தமிழ் நூல் குறிக்கின்றது. எனவே, புறப்பூக்கள் வீரப்பூக்கள். அக்காலப் போர்முறை வீரத்தின் அடித்தளங் கொண்டது.

'அயர்ந்தால் அடி, தளர்ந்தால் தாக்கு, உயிர்க்கெல்லாம் ஊறு, உலகிற்கே அழிவு' என்பன இக்காலப் போர் நடைமுறை. முற்காலத் தமிழர் போர்முறையில் நாகரீகமும் நேர்மையும் நின்றன. உண்மை வீரம் ஒளிவிட்டது. இவற்றிற்கு அடி