பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 84 ஆனால், மனங்கருதிச்சூடுவதில் மனம் இழைந்துநின்றது. மணத்திலும் வெறி மணம் இல்லா நறுமணம்; நறுமணத்திலும் தினவு ஊட்டாத இன்மணம்; இன்மனத்திலும் இதமான மென்மனப் பூக்களையே தேர்ந்தனர். இத்தன்மை வாய்ந்த பூக்களையே மன உணர்வான அதிலும் காதல் உணர்வான அகத்திணைக்குத் தேர்ந்தனர். அவைதாம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல். இவை தனித்தனியே அவ்வந் நிலத்திற்குச் சிறந்தவை. இக் காரணத்தால் அவ்வந் நிலத்தின் திணைப்பெயராக்கினர். ஆனால், அவ்வந் நிலத்திற்கும் திணைக்கும் உரிமையுடைய பூக்களாகவோ மற்றத் திணைக்கோ நிலத்திற்கோ தொடர்பில்லாத பூக்களாகவோ வைக்க விரும்பவில்லை. குறிஞ்சிப்பூ மலை ஒன்றில்தான் பூக்கும் இயற்கையுடையது. என்றாலும் காடுவாழ் மக்களோ, மருத நிலத்தாரோ, நெய்தலாரோ சூடாது விடுவரோ? அதன் தேனைப் பருகாது தேம்புவரோ? முல்லை காட்டிற் சிறந்த பூதான். மற்ற நிலங்களிலும் பூக்கும். மணங்கமழும் இதனை மற்ற நில மக்கள் சூடக்கூடாதோ? இவ்வாறே மருத மலரும் நெய்தல் மலரும் பல்வகை மக்களாலும் விரும்பிச் சூடப்படுபவை. இந்நான்கு மலர்களையுமே நாணில மக்கள் யாவரும் விரும் பினர்; விழைந்தனர்; உவந்தனர்: மோந்தனர், நுகர்ந்தனர்; சூடினர்; மகிழ்ந்தனர். ஒவ்வொரு திணைக்கும் உரிய ஒவ்வொரு பொழுது உண்டு. இதன்படி அவ்வப்பூவையும் அவ்வப்பொழுதில்தான் சூடவேண்டும் என்று வரையறுப்பதா? முல்லைத்திணைக்குரிய பொழுது மாலை. குறிஞ்சிக்குரிய பொழுது யாமம். மாலைத்திணைப்பூவை காதல னொடு குலாவும் யாமத்தில் காதலி சூடக்கூடாது என்றால் அது இயற்கைக்கு மாறுபட்டதாகும். இதுபோன்றே அவ்வப்பூவை அவ்வப் பொழுதில்தான் சூடவேண்டும்; அவ்வத்திணையில்தான் பாடவேண்டும் என்பது வாழ்க்கை நுகர்ச்சிக்குத் தடை விதித்த தாகும். இலக்கணம் வகுத்த பெருமக்கள் அத்தகைய வேலி போட வில்லை. மலர் மணம் வேலிக்குள் அடங்குமோ? - அதனால், 'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும்' . -என் ஒரு விதி விலக்கு-புறநடை 54 தொல்:பொருள்:21