பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தில்லை. இது உண்மை. ஆனால், நம்முடைய கண்களுக்கு இப்பொழுது நடைமுறையில் தென்படும் பல பூக்களும் நம் பழம் இலக்கியங் களில் தென்படுகின்றன. இந்தப் படைப்பு 'கவிஞர்கோ' எங்கள் பதிப்பகம் மூலம் தருகின்ற முதற்பதிப்பு. இதனை வெற்றிப் பதிப்பாக்க எண்ணினோம். எண்ணி யாங்கு எய்தினோம். எங்கள் நிறுவனம் இலக்கியப் படைப்பிற்காக ஏற்பட்ட ஒரு பூங்கொடி. அக்கொடியில் பூத்த முதல் மலர் "இலக்கியம் ஒரு பூக்காடு.” இந்தப் படைப்பிற்குக் காரணமாகஅமைந்த ஆசிரியருக்கு எங்களது இதயங்கனிந்த நன்றி, டாக்டர் வ. சுப. மாணிக்கம் எம் ஏ, பிஎச். டி அவர்கள் அணிந்துரை வழங்கிச் சிறப்பித் துள்ளார்கள். அந்தச் சிறப்பை மனத்தில் நிறுத்தி நன்றி கூறுகின்றோம். ஓவியர் அமுதோன் அவர்கட்கும், சிறந்த பதிப்பாக அச் சிட் டு த விய குரு குல ம் அச்சகத்தார்க்கும் நன்றி. கருத்துப் புதையலை, நூலக வாடா மலரை, அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு முத்தை மெருகுப் பேழையில் வைத்துத் தமிழ்ப் பெரு மக்களுக்கு வழங்குவதில் மனநிறைவு கொள்ளு. கின்றோம். . - இராக்போர்ட்டு வெளியிட்டகத்தார்.