பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

என்னும் சொல் நினைவில் நிற்கலாம். இத்தோற்றப் பருவத்தில் மற்றொரு குறிப்பையும் நினைக்கலாம். இப்பருவத்தில் தேனுக்குரிய மூலச்சாறு கருக்கொள்ளும். இச்சாறு பனை, தென்னைக் கள்போன்று தினவெழுப்பும் மட்டு'(மது)என்பது குறிக்கத்தக்கது, "தனை உறு நறவின்7 என்றும் நனை அமை கள்ளின் 8 என்றும் இலக்கியங்கள் கூறும் எழினியாதன் என்னும் வள்ளலது வழங்கும் சுவையைப் பாடிய மாங்குடி கிழார், 'வள நனையின் மட்டு (மது) என்கோ' என்று நனைதரும் தேன் சுவையைச் சிறப்பித்துக் காட்டியுள்ளார்.

நனை ஒரு நினைவுப் பருவம்.


2. அரும்புப் பருவம்

அரும் பூவாக வளர்வதற்கு அடிப்படை கொண்டதால் அரும்பூ-அரும்பு எனப்பட்டேன். அரும்புதல் என்பது தோற்றத்தின் மேல் வளர்ச்சியாகும். இது "குறு குறு நடந்து சிறு கைநீட்டும் மழலைப் பருவம் போன்றது. இலக்கியங்களில் பெரிதும் பொதுவில் கையாளப்படும் பெயர்.

அரும்பு யாவரும் விரும்பும் பருவம்.

3. முகைப் பருவம்

"முகி என்னும் சொல் முகங்காணுதல்', 'உள்ளிடம் வெளி பெற்றுக் குவிதல்’ என்னும் பொருள்கொண்டது. 'குவிமுகை', 'குவி முகிழ்' என்னும் அடைமொழியோடு குறிக்கப்படுவேன். (முகை-மலையில் உள் குடை வான இடம்), அரும்பி, இதழ்கள் அகத்தே நெகிழ்ச்சி அடைந்து அடிப்பக்கம் சற்றுப் பருத்து முகைத்துத் தோன்றுவதால் இப் பருவம் முகை' என்றானேன். அரும்பு பருத்துக் கொழுப்பது முகை, கொழு முகை' என இலக்கியங்கள் பன்னிப் பன்னிப் பேசும்.


7. பதிற் : 51 : 88. • 8. பதிற் : 12. 18. • 9. புறம் , 396 :16,