பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


61 லிருந்து கற்பை ஏற்கும் திருமணத்தைத் தரும் மணநாள் பருவம் எனலாம். முகைக்கும் போதுக்கும் இடைப்பட்ட நிலையில் பொதிந் திருந்த (மூடியிருந்த) நிலையாதலால் பொதி’ என்றொரு பெயர் பெற்றேன். வண்டு புகுவதற்கு வாய் திறந்து இடம் (இல்) கொடுத்ததால் புகு + இல்=(புக்கில்) புகில் - போகில்-என்றொரு பெயரும் கொண்டேன். - போழ்தல் என்றால் பிளத்தல். முகையாகப் மூடிப் பொதிந் திருந்த நிலையிலிருந்து வாய் பிளந்து தோன்றுவதால் போழ்துபோது ஆனேன். காலத்தைப் பகுத்து-போழ்ந்து ஆகும் நேரமாகிய பொழுதை அறிவிக்கும் போதாகவும் விளங்குகின்றேன் போது ஒரு பொழுதுப் பருவம். 5. மலர்ப் "போது அவிழ் புதுமலர்'2 -என்றபடி பருவம போதுக்கு அடுத்து அவிழும் பருவம் மலர். கட்டுவிட்டு வாய் அவிழ்ந்தபோதின் இதழ்கள் தனித்தனியே விலகி, விரிந்து, நிமிர்ந்து நிற்கும். வண்ணங்கள் மெருகேறி விளங்கும். மையப் பொகுட்டும் தாதும் காட்சி மேடையாகும். மணம் கமழும். தேன் துளிக்கும். மலர் ஆவேன். "மல்’ என்றால் வளம். 22 என் வளப்பத்தின் முழு உருவமே மலர்ப் பருவம். என் வளம் மட்டுமன்று: உலகில் உணவு வளம், உடை வளம், உறையுள் வளம், செல்வ வளம் யாவற்றிற்கும் இப்பருவமே காரணம் எனலாம். - இப்பருவத்தில் நிகழும் தாதுச் சேர்க்கையால் கருப்பிடித்துக் காயாகிக் கதிராகி, பருப்பாகிப் பஞ்சாகி, வித்தாகி மரமாகி, விளை பொருளாய் விழைபொருளாய் வளம் பெருகும்; மல்’ என்னும் வளப்பமானேன். அதனால் 'மலர்' என்னும் பெயரானேன். எனது பொதுப்பெயராகிய 'பூ' என்பதற்கு அடுத்த பெருவழக்கான பெயர் 'மலர்' - - . 21 மது. கள்: 364 22 தொல்: சொல். 808.