பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேலூர்ப் புரட்சி
9
 

களுடைய ஆதரவைத் துணையாக்கிக்கொண்டு ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணினின்றும் வேரோடு கில்லி எறிவதே அவன் குறிக்கோளும் திட்டமுமாம். ஆனால், பல்வேறு காரணங்களால் அத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறவில்லை. 1799ல் நடைபெற்ற சீரங்கப் பட்டினப் பெரும்போரில் திப்புவின் சேனைகள் தோல்வியுற்றன. திப்பு, போர் முனையில் தலையிலே சுடப்பட்டு விழுப்புண் எய்திப் பகைவர் கைப்படுதற்கு முன்பே மாண்டான். அயல் ஆட்சியினரும் பயத்தோடும் பத்தியோடும் அவன் பொன் உடலைப் புதைத்து ஆறுதல் கண்டனர். திப்பு மாண்டதும் அவன் வீர மைந்தர்களை-குடும்பத்தை-வேலூர்க் கோட்டையிலே சிறை வைத்தது கும்பினி ஆட்சி. ஆம்! பஞ்சுப் பொதிக்கு நடுவே நீறு பூத்த நெருப்புக் கட்டை ஒன்றை நுழைத்து வைத்தது போல ஆயிற்று அச்செயல்.

மனக்குமுறல்: ஏற்கெனவே கும்பினி ஆட்சியின் கொடுமையால் மனம் கொதித்துக் கிடந்தனர் வடவெல்லைத் தமிழர். அவர்தம் பிரதிநிதிகள் பலர் வேலூர்க் கோட்டையிலே நிலைத்திருந்த ஆங்கிலப் படையில் கூலிக்கு வேலை பார்த்து வந்தனர். அவர்கட்குத் துணையாகக் தென்பாண்டித் திருநாட்டில் அடக்கி ஒடுக்கி நாசமாக்கப்பட்ட பாளையக்காரர்கள் மரபிலே வந்த வீரர் பலர், தம் இயற்கைப் பண்பான போர்க்குணம் காரணமாகவும் வாழ்க்கைச் சூழ்