பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


12 1806


இவை எல்லாவற்றிற்கும் மேலாக, 1805-ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள், 14-ஆம் நாள், சென்னையிலிருந்த இராணுவப் பெருந்தலைவன் இந்தியச் சிப்பாய்கள் தங்கள் தலையிலே ஒரு வகையான புதுத்தலைப்பாகையை அணிந்துகொள்ள வேண்டுமென்று கட்டளையிட்டான்; இதனுடன் அவர்கள் புது வகைக் காலுறைகளும் தோலாற்செய்யப்பட்ட குல்லாய்ச் செண்டுகளும் இறகுச்செண்டுகளும் அணிய வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தான்; மேலும், மார்பிலே சிலுவை போன்ற சின்னம் ஒன்றைத் தொங்கவிட்டுக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினான். தேவையற்ற இத்திடீர்க் கட்டளைகளால் இந்தியச் சிப்பாய்களிடையே பெருமனக்கசப்பு ஏற்பட்டது. நாளடைவில் சுயமரியாதையையும் சொந்த மதத்தையும் இழந்து மதம் மாற நேரிடும் என்ற கலக்கமும் தமிழ் வீரர்கட்கு உண்டாயிற்று. அதனல், அவர்கள் அடைந்த மனத்துயர் மிக அதிகம். அந்நிலையில் 1806-ஆம் ஆண்டு, ஏப்பிரல், மே, ஜூன் மாதங்களில் புதுத்தொப்பிகள் வேலூர்ப்பட்டாளத்திற்கு அனுப்பப் பட்டன. உடனே அவற்றை அணிந்துகொள்ளும்படி சிப்பாய்கள் வற்புறுத்தப்பட்டார்கள். இச்சமயத்தில் வேலூரிலிருந்த ஒரு படைப்பிரிவினர், "அரசாங்கத்தின் புதிய உத்தரவுகள் எங்கள் மனத்தைப் பெரிதும் புண்படுத்திவிட்டன. எங்கட்குக்கொடுக்கப்பட்டிருக்கும் தொப்