பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

806



வீறுடன் கிளம்பியது. புரட்சி எழுவதற்கான பல்வேறு அறிகுறிகளையும் ஆங்கிலப்படை அதிகாரிகள் அறிந்திருந்தார்கள். எனினும், ஜூலை மாதம், 9-ஆம் தேதி, வெள்ளைச் சிப்பாய்களின் தளபதிகளும் இந்தியச் சிப்பாய்களின் மத்தியிலேயே தைரியமாக உறங்கச் சென்றது அனைவருக்கும் வியப்பை அளித்தது.

மேலும், இந்நாளிலேதான் வெள்ளை அதிகாரி ஒருவன் இந்தியச்சிப்பாய் ஒருவனால் பயிற்சி புரியுமிடத்தில் பகிரங்கமாக அவமானப்படுத்தப் பட்டிருந்தான். இந்நிலையில் ஜூலை மாதம், 10-ஆம் தேதி, பொழுது விடிந்ததும் இராணுவ நாள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் முதல் நாள் இரவே சிப்பாய்கள் அனைவரும் கோட்டைக்குள்ளே உறங்குதற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அப்பொழுதுதான் அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து பயிற்சிக்குத் தயாராக முடியும். வேலூரிலிருந்த பட்டாளத்தின் ஒரு பிரிவில் மிக முக்கியமான புரட்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்களே அன்றைய தினம் இரவு கோட்டையில் காவலாளிகளாகவும் நியமிக்கப்பட்டார்கள். முக்கியப் பொறுப்பிலிருந்த ஒரு முகம்மதிய அதிகாரி கோட்டையினுள்ளே இரவு காவலுக்காகத்தன் நம்பிக்கைக்குரிய ஆட்களில் எத்தனை பேர்களை நியமிக்க முடியுமோ, அத்தனை பேரையும் நியமித்தான். இன்னும் புரட்சி வேலையில் தீவிரமாக ஈடுபட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/18&oldid=1137957" இலிருந்து மீள்விக்கப்பட்டது