பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


18 1806 ______________________________________________________________________________________ வாரி வீசத்தொடங்கியது. இந்திய அதிகாரிகளின் ஆணையின் பேரில் இந்திய இராணுவத்தின் ஒரு பகுதி பயிற்சிக்களத்தில் அணி வகுத்து நின்றது. குறி பார்த்துச் சுடும் பயிற்சிக்கு ரவைகள் வழங்குவது போலத் துப்பாக்கிக் குண்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்கும் பொழுதே வெள்ளையர்களால் சூழப்பட்டிருந்த கோட்டையின் தலை வாயிலை நோக்கி நம் படையின் ஒரு பகுதி அரவமின்றிச் சென்றது. ஏற்கெனவே அவ்விடத்தில் காவல் புரிந்து கொண்டிருந்த சுதேசி சிப்பாய்களும் இப்படையினரின் வரவை எதிர் நோக்கி இருந்தார்கள். இரு படைகளும் ஒன்று சேர்ந்தன. 'டுமீல், டுமீல்' என்று துப்பாக்கிகள் வெடித்தன. குழுமியிருந்த பறங்கிக் கூட்டத்தின் குலை நடுங்கியது. புரட்சி எரிமலையின் முதல் வீச்சு இவ்வாறு தொடங்கியதும், கோட்டை எங்கும் ஒரே கொங்தளிப்பு ஏற்பட்டது. சிப்பாய் படையின் முதல் முழக்கத்தைக் கேட்டவுடன் இன்னொரு படை சுதேசி அதிகாரிகள் ஆணையைத் தலைமேல் தாங்கி, குடித்து விட்டு உறங்கிக் கிடந்த வெள்ளைப்பட்டாளத்தின்மீது பல குண்டுகளே வீசியது. அடியுண்ட அரவங்களைப்போலப் பறங்கித்துரைகள் சுருண்டு சுருண்டு நாற்காலிகட்கும் தூண்கட்கும் பின்னே ஒடி ஒளிந்தார்கள். சுதந்தர வீரர்களின. இம்முதல் வேட்டை முடிவதற்குள் தளவாடப் போறை உட்படக்