பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வேலூர்ப் புரட்சி
23
 

கண்ட வெள்ளைப் படையினர் கோட்டைக் கொடி மரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியக் கொடியை இறக்கப் பெருமுயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் முயற்சி படுதோல்வி அடையும் வகையில் ஆவேசப் போர் புரிந்தார்கள் இந்தியச் சிப்பாய்கள். பல மணி நேரப்போருக்குப் பின்னும் உயர்ந்த கொடி மரத்தில் ஓங்கிப்பறந்துகொண்டிருந்த இந்தியக் கொடியை இறக்க முடியாமல் அவமானம் அடைந்த பறங்கிப் பட்டாளத்தின் அடி வயிறு பகீரென, வேறோர் உண்மையும் சடுதியில் விளங்கியது. கையிலிருந்த குண்டுகளை எல்லாம் கரியாக்கித் தீர்த்துவிட்ட பின் கோட்டையிலுள்ள வெடிமருந்துக் கிடங்கையாவது கைப்பற்ற விரும்பிய வெள்ளைப் பட்டாளம் ஆத்திரம் கொண்டு அத்திக்கு நோக்கிப் பாய்ந்தது. ஆனால் மருந்துக்கிடங்கில் மருந்துக்குக்கூட மருந்தில்லாமல் ஏற்கெனவே சூறையாடி விட்டார்கள் இந்திய வீரர்கள்,

அவமானமும் ஆக்திரமும் பொறுக்க முடியாமல் கோட்டையின் தலை வாயிலை நோக்கிப் பின் வாங்கிக்கொண்டிருந்த ஆங்கிலப் படைகள் மீண்டும் ஒரு முறை ஆடிப் பறந்துகொண்டிருந்த இந்தியக் கொடியைப் பார்த்து அளவிடற்கரிய சினம் கொண்டு அதை இழுத்தெறியத் தாவிப் பாய்ந்தன. இம்முறையும் கடும் போர் நிகழ்ந்தது. பொழுது புலர்ந்தது. விடியற்காலை முதல் வெள்ளையாட்சி தான் கண்ட