பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

1806திய இராணுவ புரட்சி தோல்வியுற்றதற்கு முக்கிய காரணங்களைச் சரித்திர ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது. தோல்விக்கான முதற்காரணம், எந்த நாளில் புரட்சி நடத்தப்பெற வேண்டுமென்று திட்டமிடப் பெற்றிருந்ததோ, அந்த நாளுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே திடீரெனப் புரட்சியை நடத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த விபத்திற்குக் காரணம் சுதந்தர வீரர்களின் பட்டாளத்திலிருந்த ஒருவன் இரவு நேரத்தில் குடிப் போதையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மைகளை எல்லாம் பிதற்றித் தீர்த்தமையே. உண்மை வெளியாகிவிட்டால், குடி மோசம் போகுமே என்று அஞ்சிய சுதந்தர வீரர்கள், அவசரக் கூட்டம் கூடி, அன்றிரவே புரட்சிக் கொடியை உயர்த்த முடிவு செய்தார்கள். ஆம்! குடியைக் கெடுத்த குடியினால் கோட்டையிலே ஜூலைமாதம் 10-ஆம் தேதி, புரட்சித் தீ மூளும் என்பதை முன் கூட்டியே அறிந்து வேலூர்ப் பேட்டை மக்கள் யாதோர் உதவியையும் செய்ய முடியாமல் போயிற்று.

தோல்விக்கு இரண்டாவது முக்கிய காரணம், புரட்சி வீரர்கட்குத் தக்க தலைவர்கள் இருந்து வழி காட்டாமையே. புரட்சி வீரர்கள் வெள்ளை அதிகாரிகளின் உயிரையும் உடைமையையும் பாழ்படுத்திவிட்டுப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று மறைவதில் ஆத்திரம் காட்டினர்களே ஒழிய, நிலைத்து நின்று