பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வேலூர்ப் புரட்சி
35
 


தாமஸ் பாரியைப் போன்ற நடுவு நிலைமையுள்ளம் படைத்த நல்லோராலேயே வெறுக்கப் பெற்றுக் குற்றம் சாட்டப்பட்ட பென்டிங்கு பிரபுவும் அவரது கொடுங்கோலாட்சியும் புரிந்த அநீதிகளை எதிர்த்து எழுந்த வேலூர்ப் புரட்சி மாசு மறுவற்றது; அறநெறி பிறழா அருமைப்பாடு வாய்ந்தது. இவ்வுண்மையை மெய்ப்பிக்கப் பின்வரும் ஒரு சான்றே சாலும்:

கணவரை இழந்த விதவையார் பான்கோர்ட்டு என்பவர் பின் வருமாறு எழுதியுள்ளார்: புரட்சி வீரன் ஒருவன் எங்களைக் கோழி முதலியவற்றை அடைத்து வைக்கும் பட்டிக்குள் நுழைந்துகொள்ளுமாறு பணித்தான். எல்லோர் கண்ணுக்கும் புலனாகக் கூடிய நிலையிலிருந்த எங்களை மாற்றாெண்ணாச் சினம் கொண்டிருந்த புரட்சி மறவர்களின் பார்வையினின்றும் காப்பாற்றிக்கொள்ளத் துணை புரியும் வகையில் மறைத்துக்கொள்வதற்காக அவனே ஒரு பழம்பாயைக் கொண்டு வந்து கொடுத்தான். சிறிது நேரத்தில் அவ்வீரனே என் மைந்தன் பசியைத் தீர்க்க ஒரு ரொட்டித் துண்டையும் கொண்டு வந்து கொடுத்தான்.”

இத்தகைய நேர்மை நிறைந்த கெஞ்சை உருக்கும் நிகழ்ச்சிகளைக் கேட்ட கவர்னர் பென்டிங்கு பிரபுவின் மனமும் கசிந்தது. தம் கைப்பட அரசாங்க ஏடுகளில் அவர் வரைந்துள்ள குறிப்பொன்று பின் வருமாறு பேசு