பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

1806



கின்றது. 'ஐரோப்பியர்களின் உயிரைக் காக்கச் சிப்பாய்களுள் சிலர் மிக்க கருணையோடு செய்த செயல்கள் சிலவும் புரட்சிக் காலத்தில் நடைபெற்றன.'

சற்று முன் நாம் குறிப்பிட்ட தாமஸ் பாரியைப்பற்றிய நூலில் அந்நூலாசிரியர், 'வேலூர் புரட்சியின்போது எந்தப் பெண்மணியும் அவமானம் செய்யப்படவில்லை; அதற்கு நேர் மாறாக மிகுந்த அன்புடனும் மதிப்புடனும் நடத்தப்பட்டனர்,' என்று வரைந்துள்ளார்.

வாழிய வீரம்! -இவ்வாறு தாய்க்குலத்தின் பெருமைக்கும், சேய்ச் செல்வங்களின் வாழ்விற்கும், தமிழ்க்குலத்தின் புகழிற்கும் மாசு ஏற்படாத வகையில் சாதி மத பேதங்களை எல்லாம் மறந்து தேச பத்தியே தெய்வபத்தி- தியாக உணர்ச்சியே மனிதப் பண்பாடு - என்று மனத்தில் கொண்டு அயல் ஆட்சியை எதிர்த்துக் களம் புகுந்து போர் புரிந்து பீரங்கிகளால் பிளக்கப்பட்டும் தூக்கிலிடப்பட்டும் சிறைச் சாலைகளில் குற்றுயிராக்கப்பட்டும் வீரமரணம் அடைந்த பேர் ஊர் தெரியாத வேலூர்ப்புரட்சி வீரர்கட்குத் தமிழகமே! நீ எவ்வாறு நன்றி காட்டப் போகின்றாய்? இந்நாள் வரை அவர்கள் புனித வரலாற்றை அறிந்துகொள்ளவும் மறந்திருந்த நீ, இனியேனும் விழித்தெழுந்து இனமானத்தோடும் இந்திய தேசிய உணர்ச்சியோடும் மாண்டு மறைந்த மாவீரர்கட்கு வேலூரில் வெற்றித் தூண் எழுப்பி வீர வழிபாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/38&oldid=1138861" இலிருந்து மீள்விக்கப்பட்டது