பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுடரும் சோதியும்

45


எதிர்ப்பாராத இடையூறுகளும், ஆர்க்காட்டிலிருந்து வந்த சுதேசிப்பட்டாளத்தின் தேசத் துரோகச் செயலும், பலம் வாய்ந்த ஆங்கிலேய பீரங்கிகளின் ஆற்றலுமேயாகும். ஆனால், வேலூரில் 1806ல் நிகழ்ந்த இச்செயல் மறைந்தாலும், இச்செயலுக்குக் காரணமான சிந்தனை மறையவில்லை. அதன் மலர்ச்சியே 1857ல் நடைபெற்ற வடவிந்தியச் சிப்பாய்களின் பெரும்புரட்சி. வேலுர்ப் புரட்சி சுடர்; வடவிந்தியச் சிப்பாய்களின் புரட்சி சோதி. இவ்வுண்மையை 1955 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் வெளியிடப்பட்ட 'மாடர்ன் ரிவ்யூப்' பத்திரிகையில் ஹரிபாத செளத்திரி எழுதியுள்ள புலமை சான்ற வரலாற்றுக் கட்டுரை அழகாக ஆராய்ந்து விளக்குகிறது. அவர் ஆராய்ச்சியின் முடிவு வருமாறு:

"1857ல் நடைபெற்ற பெரும்புரட்சியைப் போலவே வேலூர்ப் புரட்சியும் கொதிப்படைந்திருந்த மக்களின் ஆத்திரத்தாலேயே மூண்டது. ஆனால், தீர்க்க தரிசனம் நிறைந்த-நெறியான-தலைமையில்லாததாலும், சரியான ஒத்துழைப்பும் திறமையான திட்டமும் இல்லாமையாலும் பீரிட்டெழுந்த மக்களின் ஆத்திரம்-சிதறிக் குலைந்தது. 1806ல் வேலூர்ப்புரட்சியின் போது 'மாவீரன் திப்புவின் மைந்தர்க்கு அரசுரிமை அளிப்போம்!' என்ற கூக்குரல் வானளாவ எழுந்தது. அவ்வாறே 1857ல் பாராளும் உரிமையிழந்த கடைசி முகலாய அர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/47&oldid=1256115" இலிருந்து மீள்விக்கப்பட்டது