பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேலூர்ப் புரட்சி
7
 அதே நேரத்தில் கர்நாடகம் முழுவதையும் கொடுங்கோலுக்கு இரையாக்கியது கும்பினி ஆட்சி. ஆம்! அந்தக் கொடுங்கோலின் தன்மையை-அதன் விளைவுகளை-அக்கொடுங்கோலர்களின் குடியில் தோன்றிய வெள்ளை வரலாற்று ஆசிரியர்களாலேயே மறைக்க முடியவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் வடவெல்லையில் சுதந்தரமாக வாழ்ந்துவந்த எண்ணற்ற பாளையக்காரர்களை அடக்கி ஒடுக்கி நாசமாக்குவதில் வெள்ளை அரசாங்கம் தன் முழுக் கவனத்தையும் செலுத்தத் தலைப்பட்டது. அதன் பயனாக வடவெல்லையில் வாழ்ந்த பாளையக்காரர்களுக்கும் ஆங்கில வல்லரசிற்கும் இடையே போர் மூண்டது. பல மாதங்கள் போர் நடைபெற்றதாயினும், இறுதி வெற்றி ஏகாதிபத்தியத்தின் சார்பிலேயே அமைந்தது. மாவீரர்களாகிய கட்ட பொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் ஆகியோரையே கொன்று தீர்த்த கும்பினிப் படைக்கு முன்பு போதுமான ஆயுதபலமற்ற வடவெல்லைப் பாளையக்காரர்களால் என்ன செய்ய இயலும்! அவர்கள் வீரப் போர் புரிந்து விண்ணுலகெய்தினர்கள். அதை ஒட்டித் தென்பாண்டி நாட்டில் செய்ததுபோலவே கும்பினி அரசாங்கம் தமிழகத்தின் வடவெல்லையிலும் பேயாட்டமாடிற்று. வானுயர்நத கோட்டைகளெல்லாம் குப்பை மேடுகளாயின. அடர்ந்த காடுகளெல்லாம் அழித்து நாசமாக்கப்பட்டன. தேச பத்தர்கள் வாழ்ந்த இடங்