உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

A VOCABULARY IN

Bundoobust or a Settlement of the Revenew to be paid or collected குடுக்கல் வாங்கல் காரியங்களிலே ஒரே தீர்மானங் கொண்டிருக்கிறது
Chokeedar, Watchman காவல்காறன்
Choultry சத்திரம், சாவடி
Chubdar,Staff bearer தலையாரி,தடி பிடிக்கிறவன்
Circar, Head man இசமான், தலைவான்
Cowl, Order கட்டளை, உடன்படிக்கை
Cutcherry ஞாயஸ்தளம், சீமாமூலம்
Cutwall a Chief officer Superintendent of Market தளவாய், கடைகளை விசாரிக்கிறவன்
Darogah, an overseer விசாரணைக்காறன்
Dewan, A Place of assembly, a Chief Judge சபை கூடுகிற யிடம், ஊர் கரரியங்களை விசாரிக்கிற முதன்மையான ஞாயாதிபதி
Dewanny, Court of Adawlut அதாலத்துக் கச்சேரி
Dowle, an Estimate பிறமாணம், இவ்வளவென்று யெர்ப்படுத்துகிறது
Dubash துபாசி, இரண்டு பாஷகளையும் பேசகிறவன்
Daffadar, The Court ஞாய சங்கம்
Enaum, Gift வெகுமதி
Fakheer, a Beggar எளியவன், பரதேசி, பிட்சைக்காறன்
Fermaun, Royal Grant ராசாவின் கட்டளை
Foujdarry Court or Court of Criminal law குத்தவாளிகளை விசாரிக்கிற சங்கம்
Goomoostah, an Agent இசமானுக்குவதலாயிருக்கின்ற காரியஸ்தன்
Hakim, a Ruler ஊர் ஆளுகிறவன்
Jagheer சாகீர்
Jummah, Total sum மொத்தம்