உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

FAMILIAR DIALOGUES IN

At your service,
உம்முடைய தயவினாலே உம்முடைய ஊழியத்திலே.
Sit down sir; boy give a Chair to this Gentleman,
உளுக்காருமையா இந்த துரைக்கொரு நாற்காலி கொடு.
I am very well to serve you,
நான் உமக்கு ஊழியம் பண்ணுகிறதற்குச் சுகமாயிருக்கிறேன்.
I most humbly thank you,
நான் மிகுந்த பணிவோடே யும்மை வந்தனம் பண்ணுகிறேன்.
How is Mr. A?
ஏ என்கிற துரை யெப்படியிருக்கிறார்.
I believe he is well,
அவர் சுகமாயிருக்கிறாரென்று நம்புகிறேன்.
He was well last night,
இராத்திரி அவர் சுகமாயிருந்தார்.
I rejoice at it,
அதற்கு நான் சந்தோஷப் படுகிறேன்.
Where is he,
அவர் எங்கே?
In the Country,
ஊரிலே.
In Town,
பட்டணத்திலே.
At home,
வீட்டிலே.
He is gone out,
அவர் வெளியே போய் விட்டார்.
How does my Lady,
என் துரைசானி யெப்படியிருக்கிறாள்.
She is well,
அவள் சுகமாயிருக்கிறாள்.
I believe she is well,
அவள் சுகமாயிருக்கிறாளென்று நம்புகிறேன்.
She is not well,
அவள் சுகமாயிருக்கவில்லை.
She is sick,
வியாதியாயிருக்கிறாள்.
What is her sickness,
அவளுக்கென்ன வியாதி?
She was ill yesterday morning,
நேற்று காலமே நலமா யிருந்தாள்.
She does not look of a very strong constitution,
அவள் மிகவும் உறுதியான சரீரக் கட்டளையுடைத்தானவளாய்க் காணப்படவில்லை.
She is to take a dose of Physick tomorrow.
நாளைக்கு பேதிக்கு வாங்கிக் கொள்ளவிருக்கிறாள்.
That will do her good,
அது அவளைக் குணமாக்கும்.