உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL

133

She must spare herself,
அவள் பத்திரமாயிருக்க வேணும்.
She must diet herself,
அவள் பத்தியம் பிடிக்க வேணும்.
I'll come and see her to-night,
இராவிக்கு நான் அவளை வந்து பார்க்கிறேன்.
I am sorry to hear she is ill,
அவள் வியாதியா யிருக்கிறாளென்று கேட்கிறதற்கு விசனப்படுகிறேன்.
I was a little out of order last night
இராத்திரி நான் கொஞ்சம் லகு தப்பியிருந்தேன்.
I thought I should have died,
நான் செத்துப் போவேனென்று நினைத்தேன்.
I am now very well re-covered thank God,
சுவாமி தயவினாலே நான் இப்பொழுது சொஸ்தப்பட்டிருக்கிறேன்.
Truly, I am sorry for it,
மெய்யாகவே அதற்கு நான் விசனப் படுகிறேன்.
How do all at your house,
உங்கள் வீட்டிலே யெல்லாரும் என்னமாயிருக்கிறார்கள்?
They are all well except my Mother,
என் தாயார் தவிர அவர்களெல்லாருஞ் சுகமாயிருக்கிறார்கள்.
I am sorry I have no time to see her today,
இன்றைக்கு அவளைப் பார்க்கிறதற்கு எனக்கு வேளையிராத்தினாலே விசனப்படுகிறேன்.
Sit down a little,
சற்றேயுளுக்காரும்.
Indeed I cannot,
மெய்யாகவே நான் மாட்டேன்.
You are in great haste,
நீர் வெகு துரிதப்படுகிறீர்.
I'll come again to-morrow,
நான் நாளைக்கு மறுபடியும் வருகிறேன்.
Pray stay a little,
சற்று நேரமிருக்கும் படியாய் மன்றாடுகிறேன்.
I have earnest business,
எனக்கு அகத்தியமான வேலையிருக்குது.
I must go home,
நான் வீட்டுக்குப் போக வேணும்.
Present my service to your brother,
உம்முடைய சகோதரனுக்கு என்னுடை வந்தனஞ் சொல்லும்.
Present my respects to your sister,
உம்முடைய சகோதரிக்கு என்னுடைய வந்தனஞ் சொல்லும்.
I will not fail,
நான் தவறிப் போகிறதில்லை.
Good night t'ye Sir,
உமக்கு இரா வந்தனமையா.