உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



138

FAMILIAR DIALOGUES IN

What did you do after supper?
இராப்போசனத்துக்குப் பிறகு என்ன செய்தீர்?
We played at Cards, after that we went to the ball,
கடிதாசியாடிக் கொண்டிருந்தோம் அதன் பிறகு கூத்துக்குப் போனோம்.
How long were you there?
அங்கே நீங்களென்னேர மட்டுமிருந்தீர்கள்?
Till twelve o'clock at night,
இராத்திரி பனிரெண்டு மணி வரைக்கும்
At what time did you go to bed?
என் நேரத்துக்குப் படுத்துக் கொள்ள போனீர்?
At one o'clock in the morning.
காலமே ஒரு மணிக்கு.

DIALOGUE VI
௬-ம்.சம்பாஷணை.

OF BREAKFAST.

காலை போசனத்தினுடையது.

Will you Breakfast?
நீர் காலை போசனம் பொசிக்கிறீரா?
What will you have for breakfast?
உம்முடைய காலை போசனத்துக்கு என்ன வேண்டியது?
ls it time to breakfast?
இது காலை போசனம் பண்ணுகிற வேளையா?
I'll go in the kitchen to see what the Cook has to give us,
குசினிக்காறன் நமக்கு என்ன கொடுக்க வைத்துக் கொண்டிருக்கறானென்று சமையலிடத்தில் பார்க்கப் போகிறேன்.
There is nothing but Bread and Butter,
றொட்டியும் வெண்ணையு மாத்திரமிருக்கு தொழிய அங்கே வேறொன்றுமில்லை.
If you will eat some meat, I shall send to market for some veal, mutton or beef,
நீர் மாம்சஞ் சாப்பிடுகிறதானால் கடைக்கனுப்பி கொஞ்சங் கன்றிறைச்சியாவது ஆட்டிறைச்சியாவது அல்லது மாட்டிறைச்சியாவது அழைப்பிப்பேன்.