இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
146
FAMILIAR DIALOGUES IN
She brought forth a girl, she has got a girl,
அவளொரு பெண் பிள்ளையைப் பெற்றாள்.
I thought it was a girl,
நான் பெண்ணென்று நினைத்தேன்.
I thought it was a boy
நான் பிள்ளையென்று நினைத்தேன்.
Where will the child be Christened
குழந்தைக்கெங்கே ஞான ஸ்நானங் கொடுக்கப்படும்.
At our House,
எங்கள் வீட்டிலே.
The Child will be Christened, at the Mount Church by a Priest from Madras
பட்டணத்திலிருக்கிற குருவானவராலே மலை ஆலயத்திலே குழந்தைக்கு ஞான ஸ்நானங் கொடுக்கப்படும்.
Who are the God Father and God Mother to the Child?
அந்த குழந்தைக்கு ஞானத் தகப்பன் ஞானத் தாயாரார்?
I do not know them
நான் அவர்களை அறிய மாட்டேன்.
Are the wet Nurse, the Midwife, and the dry Nurse there?
பால்குடுக்கிற தாதியும், மருத்துவச்சியும், வளர்க்கிற தாதியும் அங்கேயிருக்கிறார்களா?
Yes they are,
ஆமவர்களிருக்கிறார்கள்.
Do you Stand God Father to the Child?
நீரந்த குழத்தைக்கு ஞானத் தகப்பனாயிருக்கிறீரோ?
Yes, I am requested by the Parents of the Child to Stand God Father,
ஆம் அந்த குழந்தையினுடைய தாய், தகப்பன் என்னை ஞானத் தகப்பனாயிருக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.
Is Your Sister Married?
உன் சகோதரி கலியாணம் பண்ணினாளா?
No; but she is betrothed,
இல்லை. ஆனால், அவள் கலியாணம் பண்ண உடன்படிக்கைப் பண்ணியிருக்கிறாள்.
Was it with the consent of her Parents and relations or her own will?
அது அவளுடைய தாய் தகப்பன் முதலான உறவின் முறையார்கள் சம்மதியின் பேரிலோ அல்லது அவள் மன பூருவமாகவோ?
I do not know anything about it,
அந்தச் சம்மந்தம் எனக்கொன்றுந் தெரியாது.