பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 147

When was she betrothed = அவள் எப்போ கலியாணம் பண்ணுவாளென்று உடன்பட்டாள்

It is now eight days since she entered into the articles of Matrimony, = அவள் கலியாணம் பண்ணுவாளென்று உடன்பட்டது இப்போ எட்டு நாளாயிற்று

How do you come to know only this, = இதுமாத்திர முமக்கெட்படி தெரியவந்தது

What made you question me so particularly on the subject; = இந்த சங்கதியைக் குறித்து இத்தனை விவரமாய் நீரென்னைக் கேட்க வேண்டியதென்ன

I hope you will not take for a point, = நீரதை குற்றமாயெண்ணமாட்டீரென்று நம்புகிறேன்

I thought you are rather too inquisitive to know all these, = நீரிதுகளையெல்லாம் அறிகிறதற்கு ஆசைகொண் டிருக்கிறவரென்று நினைத்தேன்

No my good friend it is not upon that intention, = என் பிரியமுள்ள சிநேகிதனே அந்த நினைவைப்பற்றியல்ல

Whom is she going to Marry = அவள் ஆரைவிவாகம் பண்ணப்போகிறாள்

She is going to Marry Mr. D. = டி, என்கிற துரையை விவாகம்பண்ணப்போகிறாள்

That is a good match for her, = அது அவளுக்குச் சரியான சோடுதான்

What Portion does your Father give her, = உம்முடைய தகப்பன் அவளுக்கென்ன சீதனங்கொடுத்தார்

Ten thousand Pagodas, So far that is a good portion, = பதினாயிரம் வராகன் அந்தமட்டுக்கும் அது நல்லசீதனந்தான்

Where is the young man Employed, = அந்த பிள்ளையாண்டானெங்கே உத்தியோகம் பண்ணுகிறான்

He is Employed as an Interpreter of French Language in the Supreme Court, = அவன் பெரியஞாயஸ்தலத்திலே பிரான்சுபாஷையை விடுவிக்கிறது பாசித்தன உத்தியோகத்தில் அமந்திருக்கிறான்