உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

FAMILIAR DIALOGUES IN

I have no Penknife to mend my pen.
நான் எழுதுகின்ற இறகை சீவுதற்கு எனக்கு கத்தியில்லை.
Hold your tongue.
உன் வாயை மூடு.
Bring me a sheet paper out of that.
அதிலே எனக்கொரு தாள் கடுதாசி எடுத்துக் கொண்டு வா.
Wait till I have finished this letter.
இந்தக் காகிதததை நான் எழுதி முடியு மட்டும் கார்த்திரு.
Don't go away.
போய் விடாதே.
Wait here till l return.
நான் திரும்பி வருமட்.டும் இங்கே கார்த்திரு.
Bring the ink bottle.
இங்கி புட்டியைக் கொண்டு வா.
Mend this Pen.
இந்த இறகை சீவு.
Cut this Paper.
யிந்தக் கடுதாசியை அறு.
Enclose this note in that letter.
அந்தக் காகிதத்திலே இந்தச் சீட்டை உள்ளடக்கம் பண்ணு.
Send this to the Post Office
இதை தபால் ஆபீசுக்கு அனுப்பு
Here is a man waiting with a letter.
இங்கே ஒரு மனிதன் காகிதம் வைத்துக் கொண்டு கார்த்திருக்கிறான்.
Tell him to come in.
அவனை உள்ளே வரச் சொல்லு.
Ask him if his Master is at home or gone out?
அவனுடைய இசமான் வீட்டிலே இருக்கிறாரோ அல்லது வெளியே போய் விட்டாரோவென்று அவனைக் கேள்?
He says that his Master is gone to the big-mount feast.
அவனுடைய யிசமான் பெரிய மலை திருவிழாவுக்குப் போயிருக்கிறாரென்று சொல்லுகிறான்.
Did he go with his Family?
அவருடைய சமுசாரத்தோடேபோனாரோ?
No Sir, my Mistress remains in the house.
இல்லை அய்யா. என் துரைசானி வீட்டிலே நின்று விட்டாள்.
Take this letter to your Mistress.
இந்தக் காகிதத்தை உன துரைசானிக்குக் கொண்டு போய் குடு
Boy, order my Palankeen.
பய்யலே என்னுடைய பல்லக்கு தயார் பண்ணு.