பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(௮)

தொல்காப்பியம்


டாசிரியர் கூறியகடாவிற்கு விடை கூறினார். அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி நீர் தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்கவென்று கூறுதலானுந் தொல்காப்பியனாரும் பல்காலுஞ் சென்று யான் செய்த நூலை நீர்கேட்டல் வேண்டுமென்று கூறுதலானு மிவ்விருவரும் வெகுளாம லிந்நூற்குக் குற்றம் கூறிவிடுவலெனக் கருதியவர் கூறிய கடாவிற்கெல்லாம் விடை கூறுதலி ‘னரிறப’ வென்றார்.

அவர் கேளன்மி னென்றற்குக் காரணமென்னையெனின் தேவரெல்லாருங் கூடி யாஞ் சேரவிருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசையுயர்ந்ததிதற்கு அகத்தியனாரே யாண்டிருத்தற்குரிய ரென்றவரை வேண்டிக்கொள்ள வவருந் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு பின்னர் யமதக்கினியாருழைச்சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபாமுத்திரையாரை யவர் கொடுப்ப நீரேற்றிரீஇப் பெயர்ந்து, துவாரவதிப்போந்து நிலங்கடந்த நெமுடியண்ணல் வழிக்கண்ணரசர் பதினெண்மரையும் பதினெண்கோடி வேளிருள்ளிட்டாரையு மருவாளரையுங் கொண்டுபோந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதியிலின்கணிருந் திராவணனைக் கந்தருவத்தாற் பிணித்திராக்கதரையாண்டியங்காமை விலக்கித், திரணதூமாக்கினி யாராகிய தொல்காப்பியனாரை நோக்கி நீர் சென்று குமரியாரைக் கொண்டு வருகவெனக் கூற வவருமெம்பெருமாட்டியை யெங்கனங் கொண்டு வருவலென்றார்க்கு, முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளமாக நின்று கொண்டு வருக வென்றார்க், கவருமங்கனங் கொண்டு வருவழி வையை நீர்கடுகிக் குமரியாரை யீர்த்துக்கொண்டு போயவழித் தொல்காப்பியனார் கட்டளையிறந்து சென்றோர் வெதிர்ங் கொலை முறித்து நீட்ட வதுபற்றி யேறினாரது குற்றமென்று அகத்தியனார் குமரியாரையுந் தொல்காப்பியனாரையுஞ் சுவர்க்கம் புகாப்பிரெனச் சபித்தார்; யாங்களொரு குற்றமுஞ் செய்யாதிருக்க வெங்களைச் சபித்தமையா னெம்பெருமானுஞ் சுவர்க்கம் புகாப்பிரென வகத்தியனாரையுஞ் சபித்தா ரதனானவர் - வெகுண்டா ராதலினவன் செய்த நூலைக் கேளற்க வென்றார். நான்கு கூறுமாய் மறைந்த பொருளுமுடைமையா ‘னான்மறை’யென்றார் அவை தைத்திரியமுந் தலவாகாரமுஞ் சாமவேதமுமாம்; இனி, இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமுமென்பாருமுளர். அது பொருந்தாது இவரிந்நூல் செய்தபின்னர் வேதவியாதர் சில்வாழ்நாட் சிற்றறிவினோருணர்தற்கு நான்கு கூறாகச் -