பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௭௨

பொருளதிகாரம்

மையும் உள்ளவாறுணர்தல். இவைகண்டிலமென்று கடியப்படாகொள்ளும் பொருளென்றார். இவை ஆசிரியனாணையன்றென்பது மேற்சூத்திரத்தாற் கூறுகின்றான்.

                      (ருங) 

உசஅ. இமையோர் தேஎத்து மெறிகடல் வரைப்பினு மவையில் கால மின்மை யான.

   இது இவையுங்சாட்டலாகாப் பொருள்கள் ஆசிரியனாணையாற்கொண்டன அல்லவற்றைப் பொருளெனக்கொள்க என்கின்றது, (இ-ள்.) இமையோர் தேஎத்தும் எறி கடல் வரைப்பினும் = தேவருலகத்தின் கண்ணுந் திரையெறியுங் கடல் சூழ்ந்த உலகின் கண்ணும்: 'அவை இல் காலம் இன்மையான= அறம் பொருளின்ப நுகர்ச்சி இல்லாததோர் காலம் இன்றாகையால்  அவற்றைப் பொருளென்றே  கொள்க. எ-று, தமிழ்கடக்கும் எல்லைகூறாது தேவருலகையும் மண்ணுலகையுங் கூறினமையின் இவையாண்டும் ஒப்ப முடிந்தனவெனவும் அவை உள்ள அளவும் இவை நிகழ்வனவெனவுங் கூறலின் வழுவமைதியாயிற்று. இமையாக் கண்ணராகலின் இமையோரென்றார். இடையூறில்லா இன்பச்சிறப்பான் இமையோரை முற்கூறினான். (ருச)

பொருளியன் முற்றிற்று.