பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

[1]மீனாட்சி சுந்தரம் விரும்பி மகவொடு
தானாட்சி புரிந்து தகுதியொடு வாழ்கிறான்.
பெருமையும் கல்வியும் பேணுறும் தங்கையென்
அருமை மாலை யம்மை என்பவள்
சோம சுந்தரத் தூயோன் மனைவியாய்
நாமம் நிறுத்தி நன்கில் வாழ்கிறாள்,
கடைசியிற் பிறந்த கலியாண சுந்தரம்
தடையற ஆங்கிலம் தமிழொடு கற்றிடும்
நாளையில், என்பிதா நாளும் வருந்திட
நாளை முடித்தனன். நானிது காறும்
குடும்ப வரலாறு கூறினேன் சுருக்கி;
இடும்பை யுற்றவென் இயல்பினி மொழிவனே.


  1. மீனாட்சிசுந்தரம்- நூலாசிரியர் தம்பியான மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
    நூலாசிரியருக்கு பாஜ சிந்தனை வழக்கில் இரட்டை ஆயுள்
    தண்டனை விதிக்கப்பெற்றதைக் கேட்டு அதிர்ச்சியுற்று புத்தி
    தடுமாறிப் பித்தராகத் திரிந்து 1943-ம் காலமானார்.

6