உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சலியூட்டுச் செய்தனர் சர்க்கார் மனிதரின்

  • கிலியூட்டைக் காட்டல போல். கிட்டினேம்

                                                            [கோர்ட்டினை
எண்ணிலா மனிதர் எங்கெங்கும் நின்றனர்.
எண்ணிலாப் போலிஸார் இங்கங் குலாவினர்.
இறங்கவும் வண்டிவிட் டெதிர்வந்து சைக்கிளார்
உறங்கி விழித்தவர் போல் உற்றெமைப் பார்த்து
முன்னே நடந்தனர் ; மூவரும் பின்னடைந்தேம்.
சொன்னேரத் துள்ளே தோன் றினேம் விருசுமுன்.
சிலநாள் சிறையிருக்கத் திரும்பிவரம் கொடுத்தான்
பலநாள் சிறைவைக்கப் பாவியுள் நினைத்தே
சென்றேம் சிறைக்குள் செப்பிய சிறப்பொடு ;
அன்றே நண்பர் அறைந்தனர் ஒப்பமிட.
மறுநாட் காலையில் வைத்தென தொப்பம்
குறுகவும் உட்† கேற்றைக் கூடியங் கிருந்தாருள்
டிப்டிசூப் பிரண்டெண்டு திடீரென வந்துமுன்
"இப்படியோர் வாரண்டிருக்கிற "தென் றளித்தான்.
“ தெரிந்தே தான்வந்தேன்:செல்லுவோம் என்றேன்,
எரிந்தேபோம் விருசுகண் எதிர்சென்று நின்றேன்.
பேயிச்சை போன்ற பெருவாய் திறந்தவன்

  • “ ஈயைச்சு வாலேஸ் இவ்விடம் வந்துளன்

அடிஷனல் டிஸ்டிரிக்கு மேஜிஸ்தி ரேட்டாக,
அடுமவன் கோர்ட்டென்” றறைந்தான். பின்னர்
வாலேஸ் வந்தான் : வாயுதாப் போட்டான் ;
மேலொரு பிராதை வேண்டினான் சிவத்தின்
பிரசங்கத் திற்கியான் பெருமுதவி செய்ததாவென்
பிரசங்கப் பொய்க்குறிப்பும் பெரும்பிழை
                                                            [காட்டாதால்.


  • கிலியூட்டு-பீதியடைதல்.

†கேற்று-gate.

  • ஈயைச்சு வாலேஸ்-E. H. WALLACE.

95