பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பத்மநாப ஐயங்கார் விடுதலை


பத்மன் அவன்மனை பார்க்கச் சென்றனன்
சித்தம் களித்தேம். சிறை அவன் நீங்கவும்
குரு நாத நண்பனைக் கொளுவினர் பொய்யாகத்
திருநெல் வேலியில் தீயிட்ட கேசினில்.
மந்திர நகரில் வக்கீல் பலரைத்
தொந்தரை செய்திடத் துணிந்தவர் தம்மைநல்
நடக்கை ஜாமீன் நல்கிடக் கேட்டனன்
' நடக்கை யென்பதே நண்ணிடா ஆசு.
சென்னை ஐக் கோர்ட்டில் t டிரான்ஸ்பர் செய்திடப்
பன்னிய வக்கீல்கள் பலத்தொடு பகர்ந்தனர்
ஜாமீன் தொலைந்தது. நின்றது நீந்தனை.
மறுத்தனன் ஜட்ஜி. வந்த உப சப் கலெக்டர்
இறுத்தனன் கேசை இலாததால் சாட்சியம்.
என்னுடை கேசுக் கேகையில் வருகையில்
என்னுடை குடிலினுள் இயல்பொடு சென்றியான்
நலந்தனை மொழிந்தும் நல்கிய உண்டும்
கலந்து பேசியும் ! கண்களை யெடுத்தும்
இன்பமாக் கழித்தேன் என்றும் அங்கண்.
துன்பம் சிறையுள் தொடரா தெம்மை
செயல்நலம் அளித்த டிப்டி ஜெயி லர்க்கும்
நயமிகு டிரசர்க்கும் நன்றியான் அறிந்துளேன்
நடக்சை - ஒழுக்கம்.
டிரான்ஸ்பர் - Tranfer : மாற்றம்.
| கண்கள் - மக்கள்.
97
7

 

97