பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

வழக்கு நடந்த வரலாறு


சொன்ன வாலேஸ் தொடர்ந்தெம் கேஸ்களை
பன்னாள் விசாரித்துப் பகர்ந்தான் * கமீற்றல்
அடிஷனல் ஜட்ஜா அணுகினான். பின்னி
சடகோபா சாரியார், நரசிம்மா சாரியார்,
வெங்கடா சாரியார் விரும்புமென் வக்கீல்கள்.
தங்கக் || கௌடலும், சாதுவும், பீற்றரும்
சிவத்தின் வக்கீல்கள், செப்பிய சென்னை
பவலும், ரீச்சுமண்டும் பிராஸிகுஷன் வக்கீல்கள்
வாலேசு முன்பும், வலுபின்னி முன்பும்
சால நடந்தன சாற்றிடேன் இங்கு.
முகாந்திரம் பற்பல. மொழிவேன் இரண்டொன்று
“ யுகாந்திரம்" முன்பே யுரைத்துளது காண்க.
வாதி கவர்ன் மெண்டார். வழக்கை விசாரித்தோர்
வாதியின் காலுதிர் மயிரினும் தாழ்ந்தோர்.
நியாயமாக் கேட்குதல், நியாயமா எழுதுதல்,
தயாளமாச் சிட்சித்தல், தர்மமாக் காத்தல்
எங்ஙனம் காணலாம் இக்கலி யுகத்தில்?
இங்ஙனம் விசாரித்தோர் இருந்ததும் அன்றி,
கமிற்றல் - Committal ;
மேல்கோர்ட்டுக்கு
மாற்றும்
உத்தரவு,
+ அடிஷனல் ஜட்ஜ்-அடிஷனல் செஷன்ஸ் ஜட்ஜ்,
I Saraf-A. F. Phinhey.
||கௌடல் - Mr. Cowdell.
3 சாது - சாது கணபதி பர்துலு.
| யுகாந்திரம் - கல்கத்தாவில் சடந்த ஒரு வங்காளிப் பத்திரிகை,

வீற்றர் - Mr. Petex
98

 

98