உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இருதிறக் கட்சியும் இருதிறச் சான்றும்
பெருதிறப் பொய்களைப் பேசின. ஏனெனின்
முற்கால நீதி முறையெலாம் நீங்கத்
தற்காலம் வந்துள சட்டங்கள் பொய்களை
உரைத்திடத் தூண்டும் உதவியே தந்துள.
உரைத்திடப் பொய்களை உன்னினேன் என்னெனின்,
தீயன வற்றைச் செப்பலும் தீதென
ஆயும் அறிவினர் அறைந்திவண் நின்றனர்.
முடிவினில் பின்னி முடிவிலா எமக்கு
முடிவிலும் தீர்ப்பை மொழிந்திடவா யுதா
ஜூலை ஏழெனச் சொல்லினன். அன்று
காலையில் பிச்சன் காப்பி கொணர்ந்தான்
நகையும் உவகையும் நண்ணிலன். என்னிரு
நகையை உவகையோடு நல்கினேன். அழுதான்
“ தெய்வச் செயற்கென் செய்யலாம் மைத்துன?
தெய்வச் செயலால் சீக்கிரம் திரும்புவேன்.
வருத்தப் படாதே மற்றுமுன் தங்கையும்
வருத்தப் படாத மாற்றமே சொல் 'லென்
றென்னுடை புத்தக மெல்லாம் கொடுத்தேன்.
தன்னுடை மனத்தொடு தாழ்கரங் கொண்டான்.
மதிய வுணவினை மயக்கொடு கொணர்ந்தான்
கதியினை நினைந்தும் கழறியும் உண்டேம்
என்னுயிர் முதல்மகன் ஏகினன் கேற்றுள்.
என்னுயிர் பதைத்தது : என்னுளம் அழிந்தது ;
எடுத்தேன் : முத்தினேன் ; என்மடியில் வைத்தேன் ;
கொடுத்தேன் தின்பன ; கூறினேன் சிலசொல்.

நகை-ஆபரணம் எனச் சொல்லத்தக்க மகனை (குழந்தையை.)
t மயக்கொடு - மயக்கிய மனத்தொடு.
99


99