பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

சிறை உடையின் சிறப்பு!


உடையின் பெருமையை உரைப்பேன் நினக்கு
திடனுட னிருந்து சிரிப்பொடு கேட்பாய்,
மரத்தின் பட்டையென வரையத் தக்க
உரத்த துணியில் உருப்படுத் தியநல்
கால்களில் லாத கைகளில் லாத
கால்சட்டை யொன்றும் கைச்சட்டை. யொன்றும்
அத்திறத் துணியில் அமைக்கப் பட்ட
மெத்தச் சிவந்த மேனியைக் கொண்ட
தலைக்குல் லாவெனச் சாற்றுவ தொன்றும்
தலைக்கொரு மூன்றத் தந்தன கண்டேம்
மூன்றையும் அணிந்திடின், முண்டமே யாகத்
தோன்றுவ தல்லது சொரூபம் தோன்றாத்
திறத்தவை அமைந்தும் திறத்துடன் அமர்ந்து
மறத்துடன் ஆள்வோர் வழங்கிய கொள்ளல்
எம்போ லியற்கியல் என்றுளம் கருதி
எம்பெயர் உயரவும் எம்முருத் தாழவும்
உடுத்தேம் அவற்றை உளங்கொடு. பின்னர்
அடுத்தேம் அங்குள அகன்றவொரு கட்டிடம்.
வந்தான் ஒருவன் வல்லரக்கன் போல

 

105