இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சாப்பிடுவதற்குச் சட்டியும் கலையமும்!
திட்டப் படிக்குத் தெரிந்தவன் ஒருவன்
சட்டியும் கலையமும் தயாராக் கொணர்ந்தான்:
குருநாத நண்பன் கோவென் றலறிப்
பருகாது துயருட் பட்டதாக் கேட்டேம்.
செய்தி தெரியவும் தினமெமைக் கண்ட
கைதிகள் ஒருசிலர் கதறி அழுதனர்.
படுத்தியாம் உறங்கினேம். பத்தரை மணக்கெமை
அடுத்துவந் தெழுப்பி அன்புள இருவர்
நல்கினர் வடைபழம்: நாங்கள் இருவரும்
கல்கிச் சிலர்க்கு நவின்று கொண் டுண்டேம்.
வீடிந்ததும் எமக்கு வேளாளன் ஒருவன்
மடிந்தகேழ் வரகை மண்ணோடு காய்ச்சிய
கூழைக் கொணர்ந்தான். குடியாது கொட்டினேம்.
இழைஇரு வர்க்கும் எங்குரு நாதன்
பலகாரம் அனுப்பினான். பருகினேம் நன்றா
சிலநே ரத்துள்ளே ஜெயிலர்வந் தழைத்தான்.
107
107