இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்று நான் வண்டியில் ஏறினேன். நண்பர்
நன்றென மொழிந்தனர்
நனைந்தகண் ணுடனே.
மதுரை வந்ததும் வந்தனர் அநேகர்
மதுரக் கவிகள் வந்திடக் கண்டிலேன்.
என்னூர்த் திரவியம் என்னண்டை வந்துநின்
றென்னயாம் செய்வோம் இனியென் றழுதான்.
"அழுதாற் பயனென்? ஆவதே ஆகும்
பழுதுன் காலிற் பட்டதென்? என்றேன்.
நேர்ந்ததைக் கூறினான். நின்றவர் தமக்கு
நேர்ந்ததைக் கூறியான் நெறியினைத் தொடர்ந்தேன்.
திருச்சி ஜங்ஷனில் திருப்தியா உண்டு
அடுத்த போலீஸ் டேஷனில் அமர்ந்து பின்
4.
1 111
110