உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

       சிரித்தால்கூடச் சிறை.


"அழச்சொலு கிறாயா அதுசெயேன்"என்றேன்.
சூப்பிரண் டெண்டுக்குச் சொல்லிய டாக்டர்
பேப்பரில் எழுதிப் பிழையென அனுப்பினான்.
அவனெனை விளித்துத் "தவறு நீ செய்தது;
இருமுழு வாரம் அபராதம் என்றான்.

  • திங்கள் ஒன்றில் சென்னைஐக் கோர்ட்டில்

செய்த அப்பிலில் திருத்தமும் ஒழுக்கமும்
தேசாபி மானமும் சேர்ந்தநல் ஜட்ஜ்
சங்கர நாயர் தகுதியில் பின்னியின்
தீர்ப்பினை சஸ்பெண்டு செய்தறி வித்தார்.
தொலைந்தது வேலை.சொந்த உணவும்,
சொந்த உடையும்,சொந்தப் படுக்கையும்
வந்தன.கொண்டவை மகிழ்வுடன் இருந்தேன்;
விஜாரணைக் கைதிகள் மேவும் பிளாக்கில்
ஜெயிலர் வந்து" நும் தேக நிலைக்கு
வேலை செய்தல் மிகநலம். ஆதலால்
வேலை செய்யநீர் விரும்புகின் றீரா?
என்று வினவினன். “யானிவண் வேலை
செய்திட வந்திலேன் ; செய்திட விரும்பிலேன் "
என்றேன். என்அறை பூட்டியவன் ஏகினன்.


திங்கள் -மாதம்
t பின்னி. A. H. Phinhey.
1 சஸ்பெண்டு நீக்கி. Suspend.
118


118