பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கலகஞ் செய்ததாகக் கைதிகட்கு சிறை!


ஜெயிலர்ஆஸ் பத்திரி சிகிச்சையில் இருந்தான்,
ஜெயிலர் ஆயினான் டிப்டி ஜெயிலர்.
ஜெயிலை உடைத்துச் சென்றதால் பலரும்
ஜெயிலரைக் குத்திய தாக மூவரும்
போலீ ஸாரால் சார்ஜ்செயப் பட்டனர்.
சிறையுள் இருந்துயான் மறைவிலென் நண்பன்
தப்பறி யாதாற் *சுப்பிர மணிய
வள்ளல் தனக்கு வரைக்தெடுத் தனுப்பி
எதிரிகள் +டிபன்ஸை ஏற்று வக்கீலாய்
நடாத்தச் செய்தேன். நண்பனும் ஸ்ரீநி
வாஸ வள்ளலும் வக்கீலாய் நடாத்தினர்.
சிறையினை விடுத்த எதிரிகள் பலர்க்கும்
ஒன்று முதல் இரண்டு வருஷக் கடுங்காவல்
மேஜிஸ் டிரேட்டு விருப்பொடு வழங்கினன்
அப்பீல் செய்திட செப்பிய நண்பர்க்
கெழுதினேன். அவரும் ஈந்தனர் அப்பீல்
செஷன்ஸ் ஜட்ஜ் சிரித்தத் தீர்ப்பினை
ஒன்றிரண்டு மாதமா உறுதி செய்தனன்.
ஜெயிலரைத் தாக்கிய மூவரும் செஷன்ஸ்குக்
கமீற்று செய்தே அனுப்பப் பட்டனர்

 

  • சுப்பிரமணியன் - கோயமுத்தூர் நகரசபை அங்கத்தினரும், தமி

ழறிஞரும் வக்கீலுமான சீ.கே. சுப்பிரமணிய முதலியார்.

+ டவன்ஸ் - எதிர் தரப்பு வாரம்.

123