பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

செய்யேன், தோட்டிவேலை கொல்லினும்'


4

அந்நாள் ஜெயிலர் அழைத்தெனைத் தனது
வெந்நா கொண்டு விளம்பினன் வார்டர்
இரவிலுன் அரங்கில் நீ தருகிற உன்னுடை
மூத்திரம் சேர்ந்தமண் பாத்திர மதனை
காலையில் எடுக்கும் வேலையைச் செய்ய நீ
மறுக்கிற தாகவும் மற்றவ ரும்மதால்
மறுக்கிற தாகவும் வழுத்தினன் " என்றான்.
" செக்கு வேலை செய்தல்போ தாதெனக்
கக்குஸ் வேலையும் செயச்சொலு கிறாயா?
செய்யேன் எது செய்யினும் என்றேன்
நள்ளிர வொன்றில் ராமையா வார்டர்
தனத்தில் கழறிய ஹிந்து'வும்
என்மனை கடிதமும் இனிய தின் பண்டமும்
என்னிடம் கொடுக்க எடுத்து வருகையில்
வழியில் ஓர்நெட் வாட்டரை வைத்து
பழியுறப் பிடித்திடப் பண்ணினான் ஜெயிலர்
மறுநாட் காலையில் வந்தான் எ
என்னிடம்
தெறுவாள் போலச் சிவந்த கண்ணொடு
சூப்பிரண்டு டெண்டு கூப்பிட் டென்னிடம்
ஈந்தான் படியென என்மனை கடிதம்
ஈந்ததும் படித்தேன்; “ இதுஉன் மனைவியின்
கடிதம் ; இதிலுன் கடிதம் வந்ததா
எழுதி யிருக்கிற தேநீ கடிதம்
எழுதிய தென்னே எனக்கறி வியாமல் '
என்றெனை வினவினான் “ நன் று, நீ சொன்னாய்;
.
127

 

127