பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

வார்டருக்குத் தண்டனை


“பாக்கிய வசத்தால் தூக்கநீ ஜட்ஜலை
என்று மொழிந்தேன்: நின்றவன் போயினான்.
" ஹிந்து" முதலிய கொண்டு வந்த
வார்டர்மேல் தொடர்ந்த கேஸ்தனில் மூன்று
மாதம் கடுங்காவல் வழங்கப் பட்டது.
வெயிலில் கல்லுடை வேலையை அவற்கு
ஜெயிலர் நல்கினான் ; செய்தான் அவனும்.
பெருந்தொகை யொன்று பேணி அளித்தேன் ;
கருந்தனம் கொண்டவன் கடைவைத்துப் பிழைத்
ஓர்தினம் ஜெயிலர் சூப்பிர டெண்டுடன் [தான்
வந்தான் என்அறை வந்ததும் அவன்பால்
“ வேலை படிக்க வாரம் ஒன்றுநாம்
'தருதலும் கைதியின் "டாஸ்கு தருதலும்
வழக்கே இவன்ஒரு மாத மாகியும்
டாஸ்தகுப் படி. நூல் தரவிலை ' என்றான்.
“தீர்ப்பிங் கெனக்கு டிரான்ஸ்போர்ட் டேஷன்
கடுங்காவல் அன்று ; கடுந்தொழில் செய்யேன் "
என்றேன் : ஜெயிலர்பால் “ இனிநீ அவனிடம்
ஒன்றும் சொலெலேன உரைத்தனன் காட்ஸன்.
ஜெயில் இன்ஸ் பெக்டர் ஜெனரல் வந்தான்
ஜெயிலரைக் குத்திய செயற்கும் அன்று
ஜெயிலை உடைத்த செயற்கும் காரணம்


   *டாஸ்கு-வேலை. Task.
1 டிசான்ஸ் போர்ட்டேஷன்-தீவாந்திர தண்டனை. Transpor--
tation.
120
9

 

129