பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஒளித்திடா துரை" என, “ உண்மை அஃ" தென்றேன்.
"யானிவண் இருக்கிறேன்; எதற்கும்நீ அஞ்சேல்;
பாலுஞ் சோறும் பரிந்துனக் களிக்கிறேன்;
பிராதுவேண் டாமெ"னப் பிதாவிடம் சொல்லிப்
பிராதை நிறுத்தெனப் பேசினான் அவனும்.
தந்தைஊர் சென்றனன் தைரியம் சொல்லி.
மாலைமுதல் பாக்டர் வழங்கினன் சோறுபால்;
மாலையான் உணுங்கால வந்துதன் மனையுடன்
என்னிடம் பலபல இன்புறப் பேசினான்.
பின்னவன் என்னைப் பேணியே காத்தான்.
ஆக்டிங் வீட்டு காட்ஸனும் வந்தான்.
தனியே சமைத்தெற்குச் சாப்பா டளித்த
பார்ப்பனக் கைதிதன் ஊர்ப்புறம் சென்றான்.
செய்தி அறிந்ததும் ஜெயிலர் மீச்சேல்
கைதி ஒருவனைக் கால்முகம் கழுவச்
செய்து *விபூதி சென்னியில் அணிந்து

 

  • விபூதி - திருநீறு சைவ மதச்சின்னம்.

133