பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

புலிக்கு பூனை புத்தி சொல்வதா?


வந்திலேன் இங்கு ; மற்றவ் வாள்கைக்
கிடையூறு செய்திட இங்கியான் வந்தேன்;
ஆதலால் கான்விக் டாபீசர் ஆகேன்”
என்று மொழிந்தேன். என்னவும் காட்ஸன்
“நன்று மொழிந்தாய்” என்றான் சிரித்தே.
ஒருநாள் மாலையான் மருவிய பின்சிறை
மிச்சேல் வந்து விளம்பினான் புத்திகள் !
மிஞ்சி வளர்ந்தது வெகுளி என்பால்.
“நீயோ புத்தி நிகழ்த்து கின்றவன்?
வாயை மூடடா மதியிலி, உனக்கும்
உன்னப் பனுக்கும் உன்சூப் பிரடெண்டு
உன்னையாள் கவர்னர் மன்னா தியர்க்கும்
புத்திகள் கூறும் பெற்றிமை யுடையேன்”
என்றுபல பகர்ந்தேன். சென்றனன் அவனும்:
சூப்பிரண் டெண்டுபால் சொல்லினன் எல்லாம்.
மறுநாள் அவனெனை வருத்தி ஜெயிலரைச்
சிறுவார்த் தைகள்நீ செப்பிய தற்கா
இரு [1]நெடு வாரம் அபராதம் என்றான்.
ஒரு [2]சிறு வாரத் துத்தர வடுத்தது
கண்ணனூர்ச் சிறையையான் மன்னும் படிக்கே.

 

  1. நெடு வாரம்-பக்ஷம்-பதினைந்துநாள்
  2. சிறு வாரம்-வாரம்-ஏழு நாள்.

137