பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிறையதிகாரிகள் செய்த சிறப்பு.


சிறையில்யான் இருந்த இரண்டரை வருஷமும்
மறைவிலூர் நின்றெல்லாம் மகிழ்ந்தெனக் களித்த
இளையான் என்னும் [1]இலக்கு மணன்தான்
களையாது வந்தான் கண்ணனூர் தனக்கு.
குணபதி யாகிய கணபதி பிள்ளையால்
வேண்டிய வெல்லாம் வேண்டி எற்களிக்க
ஏற்பாடு செய்தெனக் கெழுதிச் சென்றான்.
பேப்பரும் பிறவும் பெற்றேன் பின்னர்.
பலநல் வார்டரும் டவர் ஆபிஸரும்
பழக்க மாயினர்; பண்டங்கள் நல்கினர்
வழக்கப் படிநிதம் மரியாதை செய்தனர்.
தும்பு வேலையைத் தொலைத்தச் செழுத்துக்
கோக்கும் வேலை கொடுக்கப் பட்டது.
ஓரிர வினிலே ஆறிரு மணிக்கென்
அரங்குள் யான்நன் குறங்குங் காலவண்
செறிந்து மிஸ்டர் சிதம்பரம் பிள்ளையென்
றறைந்த சத்தமொன்றனேக தடவை
கேட்டு விளித்துப் பார்த்தேன். அரங்குமுன்
சிறையின் ஜுனியர் சப்அஸிஸ் டெண்டு
சர்ஜன் நின்று சௌக்கியம் உசாவிக்

 

  1. இலக்குமணன்-கோ, அ. இலக்குமண பிள்ளை.

140