பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஆஷ் துரை படுகொலை.


கலெக்டர் ஆஷுவைத் தெரியுமா? என்றான்.
“நன்றாத் தெரியும்” என்றேன். “எப்படி?”
என்றான். “யான் இவண் ஏகிய தற்கும்
தூத்துக் குடியில் தோன்றிய” “சுதேசிக்
கப்பல் கம்பனி” செத்தொழிந் ததற்கும்
அவன்கா ரண “மென் றறைந்தேன்.” ஒருவன்
அவனை நேற்று மணியாச்சி ஜங்ஷனில்
சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச்
செத்தான்” என்றான். “நல்லதோர் செய்தி
நவின்றாய் நீநலம் பெறுவாய்” என்றேன்
உனக்கிவ் வருஷக் [1]கரோஓ நேஷனில்
விடுதலை இலையெனப் பகர்ந்தான், “விடுதலை
என்றுமில் லெனினும் நன்றே” என்றேன்.
தூத்துக் குடிநின் றோட்டிய கப்பல்
எனது சொந்தம் எனவும், யான்ஒரு
கோடி நபா தேடிவைத் திருப்ப
தாகவும் எவனோ டவர்ஆ பிஸர்பால்
சாற்றினன், அதனைக் கேட்டதும் அவன்தான்
என்னிட மிருந்து பொன்னிதம் பறிக்க
ஆசை கொண்டே வேசைபோல் என்பால்

 

  1. கரோஓ சேஷன்–பட்டாயபீடிகம் (முடி சூட்டு விழா)

141