பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

டவர் ஆபீஸரின் எச்சில் ஆசை.


தினமும் வந்து சிரித்துப் பேசி
தின்பன கொடுத்துப் பண்புகள் செய்தான்
சிறிது சிறிதாச் சிலநாள் கொடுத்தேன்.
பெரிது பெரிதாப் பெறஅவன் விரும்பி
ஜெயிலர்பால் கோள்கள் செப்பிடத் துணிந்தான்
என்பால் வந்தெற் கினியன செய்த
வார்டர்க ளெல்லாம் வராமற் செய்தான் ;
சைவக் [1]கிச்சனில் தனிப்பட எனக்குச்
சமைத்த உணவினை ஜாதியில் பார்ப்பான்
ஒருவன் கொண்டுவந் துதவிடச் செய்தான் ;
ஒருநாள் மாலையான் உறங்கும் அரங்கினை
யானே பெருக்க வேணும் என்றான்.
“அந்த வேலையை எந்த நாளிலும்
செய்த தில்லையான் செய்யேன் என்றும்,
அரங்கினைப் பெருக்கினால் அன்றி அரங்குளே
போகேன்” என்றும் புகன்றேன். பின்னர்ப்
பக்கத் தரங்கின் திக்கற்ற கைதியை
விளித்தென் அரங்கினைப் பெருக்கச் செய்தான்.
களித்தங் கிருந்தேன் கண்டவன் செயலெலாம்.
சிறைஇன்ஸ் பெக்டர் ஜெனரல் வந்து
சிறையின் கைதிகள் சீரினைப் பார்த்தான்.
அப்போ தவன்பால் செப்பினேன் நிகழ்ந்தவை,

 

  1. கிச்சன்—சமையலகை. Kitchen.

142