பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிறையில் செய்யும் சித்திரவதைகள்.


அதுமுதல் சைவர் ஆக்குப் பறையில்
தனியா எனக்குச் சமைத்துணவு வந்தது.
ஆனால் அங்குள அந்தணர் சைவர்க்
கேனோ அவ்வுண வீயப் படவிலை ;
மாப்பிளை மார்கள் மாம்ஸக் கிச்சனில்
ஆக்கிய உணவே அளிக்கப் பட்டது.
அந்தோ! பாவம்! அவர்என் செய்வார்!
எந்தச் செய்தியும் இயம்பினால் அடிவிழும்.
அடியும் வெற்றடி அன்று ;கம் பளம்போர்த்
தடியும் மிதியும் அனேகர் தருவது.
கம்பளம் போர்த்துமெய் வெம்பிட அடிப்பது
இச்சிறை யன்றிவே றெச்சிறை யிலுமிலை.
அடிப்பவர் கைதிகள் ; அடிக்கச் சொல்லுவோர்
ஜெயிலினை ஆளும் ஜெயிலர் ஆதியோர்.
எவன்தான் அஞ்சான் இக்கம் பளஅடி?
எவன்தான் கண்டதை இயம்பத் துணிவன்?
பிரிட்டிஸ் இந்தியப் பெரியதே சத்தில்
இருக்கும் ஜெயில்களின் இயல்புதான் இஃதே!
ஆயிரம் பேர்முன் அடித்துக் கொல்லினும்
போயொரு வன்கரி புகலான் உண்மை.
இத்தகை நிலைமை இயைந்துள ஜெயிலில்
எத்தகை யாக இருந்துநாள் கழிக்கலாம்?
கைதிகள் உள்ளும் இராஜியக் கைதிகள்
செய்திகள் இங்கே செப்பும் தரமல.
தவறில ராயினும் அவரை ஜெயிலர்

 

144