பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அற நூல்கள் இயற்றியமை.

என்றுவந் தவன்பால் இயம்பினான் ஜெயிலர்
நன்றெனக் கூறி வந்தவன் போனான்.
வேலையான் செய்ததாப் பேரே யன்றி
வேலையே செய்திலேன். மெய்ப்பொருள் கண்டு
“மெய்யறி” வியற்றியும் நூலாசிரியர் இயற்றியுள் நூல்கள்“மெய்யறம்” இயற்றியும்
சொந்த வேலையே எந்த வேளையும்
செய்து நின்றேன். தீய ஜெயிலர்
செய்தான் ஒன்று செப்புவல் கேண்மோ.
இரவிலப் பிளாக்கில் என்னுடை திண்ணைக்
கயலுள திண்ணையில் அனேக கொலைகள்
செய்தோர் ஆயுள் தீவாந் தரத்தீர்ப்
பெய்திஅச் சிறையுள் ஏகி ஜெயிலர்
ஆதியோர் சொற்படி அனேக கைதிகன்
வேதனை அடைய மேன்மேல் அடித்துப்
பேர்மிகப் படைத்தோர்.
ஓவர்சீய ராகி
மாபோல் திரியும் மாப்பளை ஒருவனைப்
படுக்கச் செய்தனன் பாவிஅஜ் ஜெயிலர்.
நடுக்கம் கொண்டு நண்ணிலேன் உறக்கம் ;
கம்பளம் போர்த்துக் கைதிகளாலே
கம்படி கொடுப்பனா, கால்மிதி கொடுப்பனா,
குத்திக் கொல்வனா, கொடுந்துன பிழைப்பனா,
எத்தைச் செய்வனா? என்றுளம் கலகினேன்,

ஓவர்ஹியர்_மேற்ப்பார்வை படைப்போன்
நூலாசிரியர் இயற்றிய நூல்கள்

146