பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கைதிகளுக்கு விடுதலை வாங்கித்தந்தது.

வளர்த்து நின்றேன். மதிக்கவும் கண்டவர்,
கிழத்தனம் என்றுமென் கிட்ட வராமலும்.
குவிந்த மனத்தினக் கொடுஞ்சிறை இருந்த
நவின்ற சங்கர நாராயணன்முதல்
பலர்க்கு முரிய "புரொக்கிளமேஷன் ரிமிஷன் எட்வர்டு ரிமிஷனும் ஜார்ஜ்
ரிமிஷனும் கொடாமல் அவரைவைத் திருந்ததை
அறிந்தேன். "ஹிந்து" வுக் கறைந்தேன். அதுபிர
சரித்ததும் அவரைத் துரிதமா விடுதலை
செய்தனர். என்னிலம் சென்றனர். அவர்க்குக்
செய்தனன் விருந்தென் செப்பிய மைத்துனன்.
திருநெல்வேலிக் குடனவர் போயினர்.
சாற்றிய சூப்பிரண் டெண்டு ஸாமியார்
மேற்றிசை சென்றனன். வேறொரு வெள்ளை
டாக்டர் சிறையின் சூப்பிரண் டாயினன்.
ஒருநாட் காலை ஒன்பது மணிக்கு
மருவரு கடவுளை மருவியான் மகிழ்ந்து
பாடிக் கொண்டிரு பக்கமும் உலாவி
ஓடிக் கொண்டியான் உவகையுற் றிருந்தேன்.
அப்பொழுது தென்னுடை ஹாலின் இரும்பளிக்
கதவின் வெளியே கழறிய சூப்பிரண்
டெண்டும் ஜெயிலரும் சிலவார் டர்களும்
கண்டென் செயலை நின்றுகொண் டிருந்தனர்

புரோக்கினமேஷன் ரிமிஷன்_தண்டனை ரத்து பிரகடன ரிமிஷன்_தண்டனை ரத்து உத்தரவு

148