இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடவுளின் இனிய காட்சியில் ஆழ்ந்து
உடலுளம் மறந்தவன் ஒளியுளே நின்றதால்,
அவர் அவண் வந்ததும் அவரெனை விளித்ததும்
கண்டிலேன் கேட்டிலன் கால்மணி, அவரை
அண்டினேன் பின்னர் அவருரை கேட்டு
“என்ன செய்கிறாய்?" என்றனன் சூப்பிரண்ட்
“என்னுடை கடவுளை இறைஞ்சினேன்” என்றேன்
149