பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

படிப்புக்கு முற்றுப் புள்ளி.

மேலாம் படிப்பினை விரும்பி அந்நகர்
காலேஜ் என்னும் கல்லூரி தன்னை
அடையச் செய்தனன் அறிவுயர் தந்தை.
கடைவழி சென்றியான் காலம் கழித்தேன்.
அன்னது தெரிந்தவன் அடைந்து * மந்திரம்
என்னை என்னூர்க் கிழுத்துச் சென்று,
பலமதி கூறிப் பக்கத் திருத்திச்
சிலதினம் கழிக்கச் செய்தனன். அந்நாள் :

 

t காலேஜ் - கால்டுவெல் காலேஜ்.

  • மந்திரம் - திருமந்திர நகர்.

15